கோவை எஸ்.டி.பி.ஐ நிர்வாகி மீது தாக்குதல்: இந்து அமைப்பினர் இருவர் கைது.

இரு தினங்களுக்கு மூன்பு கண்ணப்ப நகரில், ஜவருல்லா என்ற எஸ்டிபிஐ நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தில் இந்து அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்த பிரகாஷ் என்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.



கோவை: கோவை கண்ணப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லா (42). இவர் எஸ்.டி.பி.ஐ (இந்திய சமூக ஜனநாயகக் கட்சி) நிர்வாகியாகஇருந்து வருகிறார்.

இரு தினங்களுக்கு முன்பு, அவருக்கும் அவரின் வீட்டின் அருகே அதே பகுதியில் உள்ளஇந்து முன்னணியை சேர்ந்தவிக்னேஷ் மற்றும் பாரத் சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா (28), நந்த பிரகாஷ் (27) ஆகியோரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இந்து அமைப்பை சேர்ந்த மூவரும், எஸ்.டி.பி.ஐ அமைப்பைச் சேர்ந்த ஜபருல்லாவை தாக்கினர். ஜபருல்லாவும்இந்து அமைப்பினரைதாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்து முன்னணியை சேர்ந்தவிக்னேஷும், எஸ்.டி.பி.ஐ ஐபருல்லாவும்காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குஅனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ரத்தினபுரி போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, ஜபருல்லா கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்து முன்னணி மற்றும் பாரத் சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா, விக்னேஸ், நந்த பிரகாஷ் ஆகியோர் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல் , ஆயுதங்களால் காயம் ஏற்படுத்தல், ஆபாசமாக பேசுதல், பொது சொத்துக்களை சேதம் விளைவித்தல் என 294(b), 323, 324, 327, 506(ii) ஆகிய 6 பிரிவுகளில் தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்புச்) சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதே போல, இந்து முன்னணியைச் சேர்ந்த விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் , எஸ்.டி.பி.ஐ அமைப்பை சேர்ந்த ஜபருல்லா மீது கொலை மிரட்டல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், ஆபாசமாக பேசுதல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜபருல்லா கொடுத்த புகாரின் பெயரில் பாரத் சேனாவை சேர்ந்த படையப்பா, நந்த பிரகாஷ்ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவமானது இரு பிரிவினருக்கிடையே நடந்த தாக்குதல் இல்லை என்றும் அவர்களுக்கு இடையே இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே தாக்குதல் நடைபெற்றுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...