உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய முதலுதவி சிகிச்சை குறித்து மருத்துவர்கள் செயல்முறை விளக்கம்

கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் நடைப்பயிற்சியை கே ஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவச்சலம் துவக்கி வைத்து மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.



கோவை: ஒவ்வொரு ஆண்டும் இதய நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த செப்டம்பர் 29ஆம் தேதி உலக இருதய தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதயம் ஆரோக்கியமாக இருப்பதன் அவசியத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நாள்கடைபிடிக்கப்படுகிறது. குறிப்பாக, இதய நோய் அறிகுறிகள், சிகிச்சை, உடல் பயிற்சியின் அவசியம், சீரான உணவு உட்கொள்வதன் அவசியம் மற்றும் உடல் உடல் பருமனால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

சமீப காலமாக முதியவர்களுக்கு மட்டுமே இருதய நோய் வரும் என்பது மாறி ஆண்/பெண் என எந்தப் பாலினத்தவருக்கும் எந்த வயதிலும் இதய நோய் வரலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், உலக இதய தினம்மேலும் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது.

இதனை இதய நோய் மற்றும் அறிகுறிகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறுதலான புரிதலை களைந்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலமே உரிய சிகிச்சை அளித்து அவர்கள் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இன்றைய நவீன மருத்துவ உலகில் நோய் இதய நோய்களை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என்பதால் செப்டம்பர் 29ஆம் தேதி உலக இதய தினத்தன்று பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் திட்டமிட்டுள்ளது.

அதனடிப்படையில், இன்று கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள கே.ஜி.மருத்துவமனை சார்பில் உலக இருதய நாள் விழிப்புணர்வு வாக்கத்தான் (நடைபயிற்சி) நடைபெற்றது.

இதயத்தை காப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த நடைபயிற்சியானது காலை கே.ஜி. மருத்துவமனையில் துவங்கியது. இந்த விழிப்புணர்வு நடைப்பயிற்சியை கே ஜி மருத்துவமனையின் தலைவர்டாக்டர் பக்தவச்சலம் துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நடைபயிற்சி கேஜி மருத்துவமனையில் துவங்கி 3 கி.மீ தூரம் வரை நடைபெற்றது. இதயத்தை காப்பது குறித்த கருத்துகளை அடங்கிய பதாகைகளை விழிப்புணர்வில் பங்கேற்றவர்கள் கைகளில் ஏந்தி சென்றனர்.இதில், மருத்துவ மாணவ, மாணவிகள், பொதுமக்கள், டாக்டர்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

முன்னதாக டாக்டர் பக்தவச்சலம் மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...