காந்தி பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தும், தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
கோவை: கடந்த 22 ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி, கோவையில் நடைபெற்ற அசம்பாவித சம்பவங்களை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவோரை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன்படி, தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி-காந்தி பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தும், தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்ப்புலிகள் கட்சி அமைப்பின் மாநில செயலாளர் கோவை மார்க்ஸ் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு இயக்கம் என்பதற்கு இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், அதனை ஒரு சாக்காகக் கொண்டு ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாட்டில் காலூன்றிட திட்டமிட்டு குறி வைத்துச் செயல்படுகின்றது.
தமிழ்நாட்டில், மக்களின் பெருவாரியான ஆதரவுடன் அமைந்துள்ள தி.மு.க. ஆட்சியை வீழ்த்திட, விஷம வேலைகளை, சில ஊடகங்கள், கூலிப்படைகள், கிரிமினல் பேர்வழிகளின் துணையோடு திட்டமிட்டே கலவரங்களை, வட மாநிலங்களில் உருவாக்குவது போல நடத்திட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி இப்போது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் “2024-லேயே தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்தல் வரும்" என்று கூறிவருகிறார்.அதற்குப் பொருள் என்ன?
பா.ஜ.க.,அ.தி.மு.க. அணிகள் திட்டமிட்டு தி.மு.க. ஆட்சிக்கு எதிராகக் கலவரங்களை ஏற்படுத்தி,திட்டமிட்ட வன்முறைகளை வலிய வரவழைத்து தங்களது சூழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்ற முயலுகின்றனர்.
எனவே, தமிழக மக்களின் உரிமைகளை சட்டமாக்க ஆளுநர் மாளிகையின் ஒத்துழையாமை, அரசமைப்புச் சட்ட நெறிமுறை தவறுதல், தேவையற்ற விஷயங்களில் மூக்கை நுழைத்து, சட்டமன்ற மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல், தமிழ்நாட்டில் ஆட்சியை முறையாக செயல்படுதலைத் தடுக்கும் அரசமைப்புச் சட்ட முரண்களை செய்து வருகின்றனர்.
மற்றொரு புறத்தில் 'திராவிட மாடல்' ஆட்சியின் புகழ் திசையெட்டும் பரவி, இவர்களைத் திக்கு முக்காடச் செய்கிறது.இந்நிலையில், தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்கிட ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் மூலம் மாணவர்களுக்கு, இளைஞர்களுக்கு வன்முறை சிந்தனைகளை கற்பித்து தவறான பாதைகளுக்கு அழைத்து செல்வதற்காக்கவும் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் திட்டமிட்டு ஊர்வலங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றனர்.
மற்றொரு புறம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக மக்களின் உரிமைகளையும், தமிழகத்திற்கு பாஜக ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய உரிமைகளை பெற்றுத்தராமல், மக்களால் பெருவாரியான வாக்கு பெற்று ஆட்சி அமைத்த திராவிட மாடல் ஆட்சியை பற்றி தொடர்ந்து அவதூறு பேசிக்கொண்டு மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்.
எனவே, தமிழகத்தில் அக்டோபர் 2 ஆம் தேதி-காந்தியார் பிறந்த நாள் அன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 50 இடங்களில் ஊர்வலத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தும், தமிழகத்தில் வன்முறையை கட்டவிழ்த்து விடும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.