கோவையில் திருநங்கைகள் சார்பில் நடைபெற்ற 'பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்' நிகழ்ச்சி

பேரிடர் காலங்களில் திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.



கோவை: கோவையில் திருநங்கைகள் நலனை காக்க வலியுறுத்தி "பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்" நிகழ்ச்சி நடைபெற்றது.



கோவையில் திருநங்கைகள் உரிமை ஆர்வலர் கல்கி சுப்ரமணியம் மற்றும் சகோதரி அறக்கட்டளை இணைந்து "பாலினம் மற்றும் காலநிலை மாற்றம்" என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில் கல்கி சுப்ரமணியம் பேசியதாவது. அதிகம் மழை வெள்ளம், தொற்று நோய் மற்றும் சுனாமி போன்றவற்றால் ஏராளமான திருநங்கைகள் இடம் மாறி அவர்களின் வாழ்வாதாரம் சூறையாடப்பட்டு உள்ளது. என கூறினார்

இதனை தொடர்ந்து திருநங்கைகள் சமூக சேவகர் சௌந்தர்யா கோபி பேசியதாவது:



தொற்று நோயின் பொது தங்கள் அடிப்படை தேவைகளுக்கு கூட கடுமையாக அவதிப்பட்டனர். சிறு தொழில் தொடங்கியவர்கள் அதை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அதை தொடங்க முடியவில்லை என்று கூறினார்.

இதனையடுத்து பேசிய செல்வி கார்த்திகா, 2015 ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். உடைமைகளை அனைத்தும் இழந்தேன். இப்போது உணவு கடை ஒன்றை தொடங்கி நடத்தி வந்தேன்.

இந்நிலையில் கடை மழையில் அடித்துச் சென்றது. அன்று முதல் நான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளேன் அது இன்றும் தொடர்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் கேட்டரிங் தொழில் நடத்தும் பிரேமா நடராஜன் கூறுகையில், தொற்று நோயின் போதும் கன மழையின் போதும் வாழ்வாதாரத்திற்காக சம்பாதிக்க முடியவில்லை. மாத வாடகை செலுத்த முடியாததால் கடந்த மூன்று வருடங்களில் பலமுறை எனது வீட்டை மாறினேன்.

திருநங்கைகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...