கிணத்துக்கடவில் வாகன தணிக்கை தீவிரம்; பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சோதனை

கடந்த இரு தினங்களாக கோவையில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலையின் எதிரொலியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தீவிர வாகனத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கடந்த இரு தினங்களாக கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்களின் எதிரொலியாக கிணத்துக்கடவு பகுதிகளில் வாகனத் தணிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு தினங்களாக கோவை மாநகரம் மற்றும் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளின் வாகனங்கள், அலுவலகங்கள் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பாட்டில்களை வீசி சென்றுள்ள சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் கோவை மாவட்டம் முழுவதும் கமாண்டோ படையினர், அதிவிரைவு படையினர், வெளி மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட போலீசார் என 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.



இதன் ஒரு பகுதியாக, கிணத்துக்கடவு அரசம்பாளையம் பிரிவு கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் கருப்புசாமி பாண்டியன் தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.



மேலும் வாகனங்களில் சந்தேகம் ஏற்படும் வகையில் நபர்கள் இருந்தால் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...