கிணத்துக்கடவு அருகே பெட்டிகடை, பேக்கரியில் சுகாதாரத்துறையினர் சோதனை; குட்கா பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்

கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிக்கடை, மளிகை கடை உள்ளிட்ட சில்லரை வியாபார கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே காட்டம்பட்டியில் பெட்டிகடை மற்றும் பேக்கரியில் சுகாதாரத்துறையினர் நடத்திய சோதனையில் தடைசெய்யபட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்பட்டு வந்ததால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.



கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டம்பட்டியில் மளிகை கடை, பெட்டிக்கடை, பேக்கரிகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத் துறையினருக்கு தகவல் கிடைத்ததன் பேரில் இன்று சோதனை மேற்கொண்டனர்.



கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர், சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த சோதனையில் சுகாதார மேற்பார்வையாளர் ராஜாவேல், சுகாதார ஆய்வாளர் குணசேகரன், ஆனந்த், கௌதம், இன்ப அரசன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது கடைகளில் தடை செய்யப்பட்ட சிகரெட் மற்றும் குட்கா விற்பனை செய்தவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, தடை செய்யப்பட்ட பொருட்களை விற்று வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...