புரட்டாசி சனிக்கிழமை: கோவை பெருமாள் கோவில்களில் குவிந்த பக்தர்கள்...!

புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு கோவை கோவை பாப்பநாயக்கன்பாளையம் பெருமாள் கோவில், லட்சுமி நரசிம்மர் கோவில், காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து சென்றனர்.


கோவை: புரட்டாசி மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்கும். அதன்படி, இன்று புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, கோவையில் உள்ள பெருமாள் கோவில்களில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து சென்றனர்.

புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி, கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், இன்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமாளை தரிசிக்க நீண்ட வரிசையில் நின்று காத்திருந்தனர்.

இதேபோல், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில், ராம்நகர் ராமர்கோவில், உப்பாரவீதி கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில், சலீவன் வீதியில் உள்ள பெருமாள் கோவில் என மாநகரில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

கொங்கு மண்டலத்தில் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலங்களில் ஒன்றான காரமடை அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று புரட்டாசி மாத சனிக்கிழமையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

அரங்கநாத பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சன சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டன. உற்சவர் அரங்கநாத பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புரட்டாசி சனிக்கிழமையையொட்டி கோவிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று மூலவர் அரங்கநாதப் பெருமாளையும், உற்சவ மூர்த்தியையும் வழிபட்டனர்.

தொடர்ந்து பக்தர்கள், அரிசி, பருப்பு, காய்கறிகளை, கோவில் வளாகத்தில் தாசர்களுக்கு படையலிட்டனர். பின் தாசர்களிடம் இருந்து சிறிதளவு காய்கறி, அரிசி, பருப்பு வகைகளை மடியேந்தி பெற்று கொண்டனர்.

தொடர்ந்து நாளை மஹாலய அமாவாசை விழாவும், திங்கட்கிழமை நவராத்திரி உற்சவ தொடக்கமும் நடக்கவுள்ளது. 4-ந் தேதி சரஸ்வதி பூஜையும், 5-ந் தேதி விஜயதசமியொட்டி குதிரை வாகனத்தில் அரங்கநாத பெருமாள் எழுந்தருளி அம்பு போடுதல் நிகழ்வும் நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை காரமடை கோயில் செயல் அலுவலர் லோகநாதன் செய்து வருகிறார்.

மருதூர் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த அனுமந்தராய சுவாமி கோவிலிலும் புரட்டாசி மாதம் சனிக்கிழமையையொட்டி அதிகாலையில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூலவர் திருமண காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காரமடை சுற்று வட்டார பஜனைக் குழுக்கள் பங்கு கொண்ட பஜனையும் அதனைத் தொடர்ந்து அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஆஞ்சநேயா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...