பெட்ரோல் பாட்டில்களை வீசிய நபர்களை கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து, அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
கோவை: கடந்த இரு தினங்களாக கோவை மாநகரத்தில் பாரதிய ஜனதா மற்றும் அக்கட்சி சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் வீடு மற்றும் கடைகள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசி சமூக விரோத அமைப்புகள் இதை பயன்படுத்தி, கோவையில் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினர் இன்று கோவை மாவட்டத்தில் அமைதியை நிலைநாட்ட மனு அளித்தனர்.

அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய அமைப்புகளின் தலைவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோவையை பதற்ற சூழ்நிலையில் இருந்து மீட்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
பெட்ரோல் பாட்டில்களை வீசிய நபர்களை கண்டறிந்து, அவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்து, அவர்கள் மீது பாரபட்சமற்ற முறையில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி ஆர் நடராஜன் எம் பி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம், மாவட்ட செயலாளர் சி. சிவசாமி, சி. தங்கவேல், மத்திய மண்டல துணை செயலாளர் ஏ.பி. மணிபாரதி உள்ளிட்டோரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் சி. பத்மநாபன், யு.கே. சிவஞானம், பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன், மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜோ. இலக்கியன், திராவிடர் விடுதலை கழகம் நேருதாஸ், தமிழ் புலிகள் கட்சி இளவேனில், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.