பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் ; சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை - கோவை ஆட்சியர், காவல் ஆணையர் எச்சரிக்கை..!

கோவையில் நிகழ்ந்த பெட்ரோல் வீச்சு சம்பவங்கள் காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்பு உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேட்டியளித்தனர்.


கோவை: கோவையில் கடந்த இரண்டு நாட்களுக்காக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் சட்டம் ஒழுங்கு குறித்து ஆட்சியாளர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் சமீரன் பேசியதாவது:



தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகரிகளுடன் சட்ட ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் குறிப்பாக கோவையில் கடந்த ஓரிரு நாட்களில் நடந்த சட்ட ஒழுங்கு சம்பவங்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

கோவையில் நடைபெற்ற இந்த 7 சம்பவகளில் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மேலும் இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் குறித்து சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில், கோவையில் 92 ஜமாஅத் அமைப்புகளை அழைத்து, ஆட்சியர், மேற்கு மண்டல ஐஜி, காவல் ஆணையாளர்கள் அடங்கிய குழுவினர் ஆலோசனை மேற்கொண்டோம், அவர்களிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டது.

இன்று மாலை இந்து அமைப்பினருடன் மதநல்லிணக்க ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், மாநகர் பகுதியில் ஏதாவது சம்பவங்கள் நடந்தாலோ, வெளி மாவட்டம் அல்லது வெளி மாநலங்களில் இருந்து வந்து ஏதேனும் நடவடிக்கையில் ஈடுபட்டாலோ, அதுகுறித்த தகவலை ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் வகையில், கிராம நிர்வாக அலுவலர், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு சிலர் பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வெடிகுண்டு வெடித்தது போல தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். கண்டிப்பாக ஓரிரு நாட்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பான நபர்கள் கைது செய்யப்படுவார்கள்.

இவ்வாறு ஆட்சியர் சமீரன் பேசினார்.

இதனை தொடர்ந்து, மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் பேசியதாவது:



கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்து வருகிறோம். இரு சக்கர வாகனத்தில் வரும் மர்ம நபர்களின் வாகனங்கள் வேகமாக செல்வதால், ஒவ்வொரு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம்.

ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள். மேலும் ஒரு சிலர் இந்த சூழலை பயன்படுத்தி இரு சமூகத்தினரிடையே பிரச்சனைகளை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவு செய்கின்றனர்.



அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். கோவையில் மொத்தம் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர், மாநகரில் 28 புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...