கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு: ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்..!

கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவையில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தமிழக கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கோவையில் கடந்த இரண்டு தினங்களாக பாஜக தலைமை அலுவலகம், ஒப்பணக்காரர் வீதியில் உள்ள தனியார் துணிக்கடை மற்றும் பாஜக, இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி செல்கின்றனர்.

இந்தத் தொடர் சம்பவங்களால் கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் முக்கிய சாலைகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் மற்றும் வாகன சோதனை கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் ரோந்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவையில் மாநகரில் 5 இடங்களிலும், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்ற வருவதால், தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் இன்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.



இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் ஏடிஜிபி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவையில் நடைபெற்று வரும் அசம்பாவித சம்பவங்கள் குறித்த விசாரணையை தீவிரப்படுத்த ஏடிஜிபி தாமரைக்கண்ணன் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

மேலும் கோவை மாநகர பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற பகுதிகளில் அவர் நேரில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...