கோவையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கூடிய விரைவில் கைது செய்வோம். யாரேனும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். போராட்டக்காரர்கள் மீது குண்டர் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்படும் - காவல் ஆணையாளர்.
கோவை: நேற்று கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம், டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை இன்று காலையில் 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி கடை என கோவை மாநகர பகுதியிலும், பொள்ளாச்சி மற்றும் மேட்டுப்பாளையத்தில்,டீசல் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன சம்பவத்தால் நேற்று முதல் கோவையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பெரும்பாலான குண்டுகள்எதுவும்வெடிக்காததால் எந்த ஒரு உயிர் சேதங்களோ பொருட் சேதங்களோ பெரிய அளவில் ஏற்படவில்லை. இருப்பினும், இப்படி அடுத்தடுத்த பெட்ரோல், டீசல் குண்டு வீசப்பட்டதாக்குதல் கோவையில் அசாதாரண சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன தணிக்கை, மசூதிகள் மற்றும் கோவில்களில் கூடுதல் பாதுகாப்பு என கோவை நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
பாதுகாப்பு பணிகளின் ஒரு பகுதியாக, இன்று மாலை காந்திபுரத்தில் ரேபிட் ஆக்ஸன் ஃபோர்ஸ் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். அந்த அணிவகுப்பில், நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பங்கேற்றனர்.
மேலும், துப்பாக்கி ஏந்திய 600 பாதுகாப்பு படையினர் காந்திபுரம் திருவள்ளுவர் பேருந்து நிலையத்தில் தொடங்கி கிராஸ் கட் ரோடு வழியாக ராம்நகர் சென்று மீண்டும் காந்திபுரம் வந்தடைந்தனர்.
முன்னதாக, அணிவகுப்பு ஊர்வலத்திற்கு வருகை தந்த மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், கோவையில் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கூடிய விரைவில் கைது செய்வோம். செக்போஸ்ட் இல்லாத இடங்களில் புதிதாக கேமராக்கள் அமைக்க திட்டம் உள்ளது.
யாரேனும் அமைதிக்கு இடைஞ்சல் ஏற்படுத்தினால் கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்படும். போராட்டக்காரர்கள் மீது குண்டர் சட்டத்திலும் வழக்கு பதிவு செய்யப்படும். தனித்தனியாக ஒவ்வொரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திலும் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்துக்குரிய நபர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், எவ்வாறு அவர் காவல் ஆணையாளர் தெரிவித்தார்.