பிளஸ் 2 முடித்தும் உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கும் திட்டம்..!

பிளஸ் 2 முடித்து எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்காத மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


கோவை: பிளஸ் 2 முடித்து, எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்காத மாணவர்களின் பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவ்வாறு உயர்கல்வி தொடராத ஒவ்வொரு மாணவரையும்தொடர்பு கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

2021-2022-ம் கல்வியாண்டில் அரசுஉதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் இவ்வாண்டு 2022-23ல்‌ உயர்கல்வி தெடர்ந்துள்ளானாரா..? என்பதனை அறிந்திடவும்‌, அவ்வாறு உயர்கல்வி தொடரா மாணவர்கள்‌ இருப்பின்‌, அதற்கான காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்து. அவர்கள்‌ உயர்கல்வி தொடர்ந்திட தேவையான வழிகாட்டுல்கள்‌ வழங்கவும்‌ தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, பெறப்பட்ட 79,762 மாணவர்களின்‌ விவரங்களில்‌, 8,588 மாணவர்கள்‌ எவ்வித உயர்கல்விக்கும்‌ விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறையின் மாநில திட்ட இயக்குனர் இரா. சுதன் அவர்கள் அனைத்து மாவட்டங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இதற்கென கடந்த ஆகஸ்ட் மாதம்26ஆம் தேதி அன்று நடைபெற்ற கூட்டத்தில்‌ பெறப்பட்ட விவரங்களில்‌ மேலும் கூடுதலாக மாணவர்களின்‌ கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு எண்‌ (EMIS), கல்வி மாவட்டம்‌, மதிப்பெண்‌. தொலைப்பேசி எண்‌ உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டும் என்றும் அணைத்து மாவட்டத்தையும்சார்ந்த முதன்மைக்‌ கல்வி அறுவலர்கள்‌ இப்பணியினை முன்னுமை அடிப்படையில்‌ மேற்கொண்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில்‌ மாநிலத்‌ திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கேட்டுக்‌கொள்ளப்பட்டுள்ளது.

செல்வத்தில் சிறந்த செல்வம் கல்வி என்ற பொன்னான வாக்கியத்திற்கு இணங்கவும், கல்வியில் பின் தங்கிய ஒரு மாநிலம் வேறு எதிலும் முன்னேற்றம் அடைய முடியாது என்பதை அறிந்து அதனை சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட "இல்லம் தேடி கல்வி" திட்டத்திற்கு கிடைத்த

வரவேற்பை போலவே, அனைவரும் உயர்கல்வி பயில வேண்டும் என்ற இந்த திட்டத்திற்கும் மக்கள் மத்தியில்ஆதரவு பெருகியள்ளது.

இருப்பினும், பெரும்பாலான மாணவர்கள் உயர்கல்வி தொடராததன் காரணம் நிதிப்பற்றாக்குறை தான் என்றும்வெறும் சொற்பமானவர்களே மட்டுமே விருப்பமின்றி உயர்கல்வி மேற்கொள்ளாமல் இருப்பார்கள் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதலால், இத்திட்டம் எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கருத்தும் சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது என்பதே நிதர்சனம்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...