8 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறுவன். பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அம்பலம்-போக்சோ சட்டம் பாய்ந்தது.

மேட்டுப்பாளையம் அருகே பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட போது 8 மாணவிகள், தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன்

ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த சிறுவன், பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தார்.

அதே சமயம் மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். அதைக் கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் அந்த வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரியவந்துள்ளதுமேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...