கொடநாடு கொலை வழக்கு அக்டோபர் 28- க்கு ஒத்திவைப்பு.

ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின் ஜாய், சம்சீர் அலி உள்ளிட்டோர் ஆஜராகி இருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார்.



கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொல்லப்பட்டு அங்கு இருக்கும் முக்கிய ஆவணங்கள் ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதுகுறித்து மேற்குமண்டல காவல்துறை ஐஜி சுதாகர் மேற்பார்வையில் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

அதில், ஜெயலலிதாவின் தோழியான சசிகலா உட்பட பல அதிமுக பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என சுமார் 230ற்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

நடத்தப்பட்ட விசாரணையில் மூடிமறைக்கப்பட்ட பல விபத்துக்கள் மற்றும் புதிய தகவல்கள் வெளியானதால், விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யாமல் வழக்கின் நிலை குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி சதீஷ்குமார்  உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.   

சமீபத்தில் நடந்த மறுப்புலன் விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள சயான், வாளையார் மனோஜ், ஜித்தன் ஜாய், ஜம்சிர் அலி உட்பட 10 நபர்களிடமும் முக்கிய குற்றவாளியாக கூறப்படும், வாகன விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரிடம் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்களிடம் சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் தனிப்படை காவல்துறையினர் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்கு விசாரணை உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் இன்று  விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பு சார்பில் வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் ஆஜராகி இவ்வழக்கு விசாரணை சம்பந்தமாக இதுவரை 316 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் 516 செல்போன் தடையங்கள் மற்றும் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் சேகரிக்கப்பட்ட பொருட்களை கைப்பற்றி ஆய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும்,  இவ்விசாரணையானது கேரளா, கர்நாடகா போன்ற பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதாலும், வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் வாளையார் மனோஜ் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்திருப்பதாலும் கூடுதல் அகவாசம் வேண்டும் என நீதிபதியிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கோரிக்கை வைத்தார். 

அரசு தரப்பு  வழக்கறிஞர் கேட்டுக் கேட்டுக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி முருகன் உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...