கோவை மாநகரில் அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு எதிரொலி - பாதுகாப்புக்காக 4 கம்பெனி சிறப்புக் காவல்படை குவிப்பு

பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் எதிரொலியாக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு, பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.


கோவை: அடுத்தடுத்து 3 இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதன் எதிரொலியாக, கோவை மாநகரில் பாதுகாப்புக்காக 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.



கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தின் மீது நேற்றிரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். இதைதொடர்ந்து டவுன்ஹால் பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றின் மீதும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களை தொடர்ந்து 5 தனிப்படைகள் அமைத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.



இந்நிலையில் இன்று காலை 100 அடி சாலையில் உள்ள பாஜக ரத்தினபுரி மண்டல தலைவருக்கு சொந்தமான கடையிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.



இதன் காரணமாக கோவை மாநகரில் 4 கம்பெனியை சேர்ந்த 400 தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.



இதனை தொடர்ந்து, ஆத்துப்பாலம், டவுன்ஹால், காந்திபுரம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.



மேலும் பாஜக கட்சி அலுவலகங்கள், பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...