பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கேரள செல்ல பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி

கேரளாவில் முழு அடைப்பு எதிரொலியாக இன்று பேருந்து சேவைகள் இயங்காததால், பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து பாலக்காடு, திருச்சூர் ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.


கோவை: கேரளாவில் முழு அடைப்பு எதிரொலியாக இன்று பொள்ளாச்சியில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

இந்தியா முழுவதும் நேற்று, தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள், ஃபாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகங்களில் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மற்றும் விசாரணை நடத்தியதில் கேரளாவில் எட்டு பேர் கோவையில் மூன்று பேர் என நாடு முழுவதும் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை கண்டித்து நேற்று எஸ்டிபிஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்புகள் சார்பாக கண்டனக் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து கேரளாவில் இன்று SDPI கட்சியினர் முழு அடைப்பு நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். அதன்படி இன்று கேரளா முழுவதும் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.



குறிப்பாக, பேருந்து சேவைகள் இயங்காததால் கேரளாவில் இருந்து கோவை, பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

குறிப்பாக, பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு, திருச்சூர் போன்ற இடங்களுக்கு செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...