எஸ்.பி. வேலுமணி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரிய வழக்கு வரும் அக்., 12 ஆம் தேதி இறுதி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம்

கடந்த அதிமுக ஆட்சியின் போது டெண்டர் வழங்கியதில் முறைகேடு குறித்து எஸ்.பி.வேலுமணி மீது அறப்போர் இயக்கம், திமுகவின் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் வழக்கை ரத்து செய்ய கோரிய வழக்கில் இறுதி விசாரணை வரும் அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என நீதிபதிகள் அறிவிப்பு.


சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்குகளின் இறுதி விசாரணை அக்டோபர் 12ஆம் தேதி நடைபெறும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின் போது, சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில், பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் அறப்போர் இயக்கம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து டெண்டர் முறைகேடு தொடர்பாக அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், அறப்போர் இயக்கம், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுக்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், டீக்காராமன் அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது, அறப்போர் இயக்கம் சார்பில் வழக்கறிஞர் சுரேஷ், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா, முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின் போது, கடந்த, 2018ஆம் ஆண்டு டெண்டர் முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது முதல், தற்போது இந்த அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது வரையிலான விபரங்களை, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்குகளின் இறுதி விசாரணையை, நீதிபதிகள் வரும் அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதுவரை, ஏற்கனவே இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடை தொடரும் எனவும் உத்தரவிட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...