கோவையில் பதற்றம்: 100 அடி சாலையில் பாஜக நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் விசாரணை..!

ரத்தினபுரி மண்டல பாஜக தலைவரான மோகன் என்பவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடையில் 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



கோவை: 100 அடி சாலையில் உள்ள பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினபுரி மண்டல பாஜக தலைவராக இருப்பவர் மோகன். கோவை 100 அடி சாலையில் இவருக்கு சொந்தமான வெல்டிங் ஆக்சஸரீஸ் கடை செயல்பட்டு வருகிறது.



இந்நிலையில் இன்று காலை அவரது மகன் மகேந்திரன் கடைக்கு வந்த போது, கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருப்பது தெரியவந்தது.



இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.



இதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய பாஜக பிரமுகர் மோகன், ஏற்கனவே கடை மீது 2 முறை பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் தற்போது 3வது முறையாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது.

கடந்த இரண்டு முறை குண்டு வீசப்பட்டதில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 2 முறையும் உரிய முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த முறை போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கோவை நகரில் அடுத்தடுத்து பாஜக பிரமுகர்களை குறிவைத்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டு வரும் சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...