சிறுமுகை அடுத்த பெத்திக்குட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற லாரி ஓட்டுனர் மீது காட்டுப்பன்றி மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சிறுமுகை அருகே இருசக்கர வாகனத்தின் மீது காட்டுப்பன்றி மோதியதில் லாரி ஓட்டுனர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமுகை அருகேயுள்ள பெத்திக்குட்டை அருகேயுள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ்(35). லாரி ஓட்டுனரான இவர், நேற்றிரவு சுமார் 10 மணியளவில், தனது இருசக்கர வாகனத்தில் புளியம்பட்டியில் இருந்து வீட்டுக்கு செல்வதற்காக புதுக்காடு நோக்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், பெத்திக்குட்டை அருகே சென்ற போது, சாலையின் குறுக்கே வந்த காட்டுப்பன்றி இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட கனகராஜ் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்நிலையில், அவ்வழியாக சென்றவர்கள், அவரை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.