அன்னூர் அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் பிரச்சனை: அறுவை சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

அன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு அறுவை சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், மின்தடை ஏற்பட்டு ஜெனரேட்டர் உடனடியாக வேலை செய்யாததால் அச்சமடைந்த குடும்பத்தினர் கர்ப்பிணியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த ஊத்துப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன் - வான்மதி தம்பதி. இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த வான்மதியை, அவரது கணவர், பிரசவத்திற்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

அப்போது, வான்மதிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த மருத்துவர்கள், அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் திடீரென மின்தடை ஏற்பட்டது.

இதனிடையே, உரிய நேரத்தில் ஜெனரேட்டர் வேலை செய்யாததால் வான்மதிக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து விக்னேஸ்வரன் தனது மனைவியை ஆம்புலன்சில் அழைத்து கொண்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பின்னர் அங்கிருந்து குழந்தை மற்றும் தாயை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெனரேட்டர் வேலை செய்யாததால் கர்ப்பிணி பெண் ஒருவர் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்ற சம்பவம் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அறுவை சிகிச்சையின் போது மின் வெட்டு ஏற்பட்டிருந்தால் அந்த கர்ப்பிணியின் நிலை என்னவாயிருக்கும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

எனவே அன்னூர் அரசு மருத்துவமனையில் மருத்துவ தேவைகளை உடனே அரசு செய்ய வேண்டும் என்றும், மின் வெட்டு ஏற்படாத வகையில் மருத்துவமனையை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...