வால்பாறையில் நீண்ட நாட்களாக குண்டும் குழியுமாக இருந்த சாலை - புதுப்பிக்கும் பணி பூமி பூஜையுடன் துவக்கம்..!

பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக கிடந்த வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் பூமிபூஜையுடன் துவங்கியது.


கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் குண்டும் குழியுமாக இருந்த சாலைகள் புதுப்பிக்கும் பணிகள், நகராட்சி தலைவர் அழகுசுந்தரவல்லி தலைமையில் பூமி பூஜையுடன் இன்று துவங்கியது.



வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில ஆண்டுகளாக குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் வால்பாறை நகராட்சி சார்பில் சாலைகளை புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு டெண்டர் விடப்பட்டது. இதில் சோலையார் எஸ்டேட் முதல் சங்கிலி ரோடு எஸ்டேட் வரையிலான 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள சாலைக்கான டெண்டர் ரூ.13.5கோடிக்கு விடப்பட்டது.

இந்நிலையில், சாலை புதுப்பிக்கும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி தலைமையில், நகராட்சி ஆணையாளர் பாலு முன்னிலையில் முடிஸ் பகுதியில் சாலையை சாலையை புதுப்பிக்கும் பணிக்கு பூமி பூஜை செய்து பணி துவக்கப்பட்டது.



இந்நிகழ்வில் வால்பாறை பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர்கள் முடிஸ் எஸ்டேட் நிர்வாகத்தினர், திமுக கட்சியினர் மற்றும் பணி செய்ய டெண்டர் எடுத்துள்ளவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...