என்.ஐ.ஏ சோதனை எதிரொலி: திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

என்.ஐ.ஏ சோதனை என்ற பெயரில் மத்திய அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி காங்கயம் சாலையில் உள்ள சிடிசி டிப்போவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.


திருப்பூர்: நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் அலுவலகங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.



தமிழகத்தில், சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், திண்டுக்கல், கன்னியாகுமரி, நாகர்கோவில், கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், தேனி, தென்காசி உள்ளிட்ட 16 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை நடைபெற்றது.



இந்நிலையில், என்.ஐ.ஏ சோதனை என்ற பெயரில் மத்திய அரசு அடக்குமுறையை ஏவி வருவதாக கூறி திருப்பூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான் தலைமையில் காங்கயம் சாலையில் உள்ள சிடிசி டிப்போவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் SDPI மாவட்ட தலைவர் பஷீர் உட்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...