ரயில்வே டெண்டர் மோசடி புகார்: கோவை ஒமேகா கட்டுமான அலுவலகத்தில் சிபிஐ விசாரணை..!

ரயில்வே துறையின் தற்போதைய அதிகாரிகளால் மதுரை சிபிஐ கிளையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், முன்னாள் அதிகாரியான சக்கரபாணி மற்றும் டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்ட கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த ஒமேகா நிறுவனத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: திருச்சி ரயில்வே உட்கோட்டத்துக்கு துணை செயற்பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் சக்கரபாணி. கடந்த 2019 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் லெவல் கிராசிங்கில் ஓவர் பிரிட்ஜ் கட்டுவதற்காக டெண்டர் ஒப்பந்தம் கோரப்பட்டு இருந்தது.

இதற்கு பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்ட நிலையில், இறுதியாக கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த "ஒமேகா கன்ஸ்ட்ரக்சன்" நிறுவனம் தேர்வானது.

பின்னர், திருச்சி ரயில்வே உட்கோட்டத்துக்கு உட்பட்ட லெவல் கிராசிங் இல் பிரிட்ஜ் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆனாலும், அதனைமீறி 38 கோடி ரூபாய் அளவில் டெண்டர் விடப்பட்ட நிலையில், அந்த பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கு இதுவரை 60 கோடி ரூபாய்க்கு மேலாக செலவானதாக கணக்கு காண்பித்து உள்ளதாகவும், இது முற்றிலுமாக ரயில்வே துறையில் இருந்து எடுக்கப்பட்ட நிதி, மாநில அரசிடம் இருந்து பெறவேண்டிய நிதி ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்று தெரிகிறது.

இந்த முறைகேடு குறித்து, ரயில்வே துறையின் தற்போதைய அதிகாரிகளால் மதுரை சிபிஐ கிளையில் புகார் தரப்பட்டது. புகாரின் அடிப்படையில், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன் அடிப்படையில், முன்னாள் அதிகாரியான சக்கரபாணியின் அலுவலகத்தில் விசாரணை நடத்தி வருகின்ற சிபிஐ அதிகாரிகள், சக்கரபாணி விடுத்த டெண்டரை எடுத்து பணிகளை மேற்கொண்ட கோவை உப்பிலிபாளையத்தைச் சார்ந்த ஒமேகா நிறுவனத்திலும் விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையின் போது, முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்கு உட்பட்டதாக தெரிகின்றன. முன்னாள் செயற்பொறியாளர் விடுத்த டெண்டர் மூலம் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தரப்பட்ட புகாரின் அடிப்படையில், டெண்டர் எடுத்த நிறுவனத்தில் சி பி ஐ விசாரணையில் ஈடுபட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...