கிரிக்கெட் மட்டையால் பனியன் நிறுவன காவலாளியை அடித்துக் கொலை செய்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பழனிசாமி, சக்தி கணேஷ், முருகேசன், கார்த்தி ஆகிய 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், நால்வரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருப்பூர்: திருப்பூரில் பனியன் நிறுவன காவலாளியை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொலை செய்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி திருப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் சாலையில் உள்ள கணக்கம்பாளையம் பிலால்நகரை சேர்ந்தவர் காஜா மைதீன் (58). இவர் வாலிபாளையம் சடையப்பன் கோயில் வீதியில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனத்தில், மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், அதே நிறுவனத்தில் இரவில் காவலாளியாகவும் தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாத நிலையில், அவரது மகன் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணையில், அவர் பணியாற்றி வந்த நிறுவனத்தில் உள்ள அறை ஒன்றில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருப்பூர் வடக்கு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ராயசமுத்திரம் மேட்டுப்பட்டியை சேர்ந்த பழனிசாமி (26), ஆலங்குடி கேப்பரை கலைஞர் நகரை சேர்ந்த முருகேசன் (25), கைக்குறிச்சி மேட்டுப்பட்டி சக்திகணேஷ் (23), கைக்குறிச்சி திருமலைராயசமுத்திரத்தை சேர்ந்த கார்த்தி (25) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதனை தொடர்ந்து, அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அதே பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பழனிசாமி தனது மனைவி கோபித்துக் கொண்டு ஊருக்கு சென்றதால், நிறுவனத்தில் இருந்து முன் பணமாக ரூ.7000 பெற்றுக்கொண்டு, வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் நிறுவனத்தில் இருந்த ஒரு அறையில் வைத்துவிட்டு ஊருக்கு சென்றுள்ளார்.
ஊருக்கு சென்றவர் பல நாட்களாக திரும்பாத நிலையில், நிறுவனத்தினர் அவரை பலமுறை தொடர்பு கொண்டும் அலைபேசி இணைப்பை எடுக்கவில்லை கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி அதிகாலை யாருக்கும் தெரியாமல், வீட்டு பொருட்களை எடுத்து செல்வதற்காக புதுக்கோட்டையில் இருந்து பழனிசாமி தனது நண்பர்களுடன் வந்துள்ளார்.
அப்போது அந்த நிறுவனத்தில் காவலாளியாக இருந்த காஜா மைதீன் அவரை தடுத்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த 4 பேரும், கிரிக்கெட் மட்டையால் காஜாமைதீனை அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது.
திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பை வழங்கிய நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் குற்றவாளிகள் 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதனையடுத்து 4 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.