கோவை அரசு மருத்துவமனையில் 3 ஆண்டுகளில் 400 ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து சாதனை - அரசு மருத்துவர்களுக்கு டீன் நிர்மலா வாழ்த்து..!

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதுவரை 400 பேருக்கு ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு, ரூ.3 லட்சம் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் இச்சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 400 ரத்த நாள அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ள மருத்துவர்களுக்குஅரசு மருத்துவமனை டீன் நிர்மலா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேசியதாவது, நோயாளிகளுக்கு கை, கால், குடல், மூளை போன்ற இடங்களில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டால் அந்த பகுதியை அகற்றும் நிலை ஏற்படும். நோயாளிகளுக்கு தாங்க முடியாத வலி ஏற்படும்.

அச்சமயங்களில் நோயாளிகள், தாங்களாகவே மருந்து எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுகி, ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்து, அடைப்பினை அகற்றினால், கை, கால் இழப்பை தவிர்க்க முடியும்.

400 பேருக்கு சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையின் ரத்த நாள அறுவை சிகிச்சை துறை சார்பில், கடந்த2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டு ரத்த நாள நிபுணர்களால், நுண்துளை ரத்த நாள அறுவை சிகிச்சை முதல் முறையாக மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தற்போது வரை 400 நோயாளிகளுக்கு ரத்த நாள அறுவை சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஓராண்டில் மட்டுமே, 200க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிசிச்சை செய்து, அவர்களின் கை, கால் மற்றும் உறுப்புகள் செயலிழப்பை தவிர்க்க முடிந்தது. இதனிடையே, கடந்த மூன்று மாதங்களில், 70 வயதுக்கு மேற்பட்ட 100 பேருக்கு வெற்றிகரமாக ரத்தநாள அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு, ரூ.3 லட்சம் வரை செலவாகும். அரசு மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

இவ்வாறு டீன் மருத்துவர். நிர்மலா கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...