வார்டு 61: எங்களுக்கு வேலை சொல்ல கவுன்சிலரின் கணவருக்கு யார் அதிகாரம் கொடுத்தது..? - தூய்மை பணியாளர்கள் கண்டனம்.

திமுக கவுன்சிலர் ஆதி மகேஸ்வரியின் கணவர் திராவிட மணி என்பவர் சுகாதார அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களிடம் அதிகார தோரணையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவை: சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சிதேர்தலில்வெற்றி பெற்ற சில பெண் வேட்பாளர்கள் பெயர் அளவுக்கு தான் கவுன்சிலர்கள், மற்றபடி வார்டில் ஆய்வு செய்து முடிவுகள் எடுப்பது போன்ற வேலைகளை கட்சியில் இருக்கும் அவர்கள் கணவர்கள் தான் செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் எழுந்து வரும் நிலையில், அதை நிரூபிக்கும் படியான சம்பவம் கோவையில் நடைபெற்றுள்ளது.

கோவை மாநகராட்சியின் 61வது வார்டுக்குட்பட்ட சுகாதார அலுவலகத்தில் திமுக கவுன்சிலரின் கணவர், அதிகார தோரணையில், பணியாளர்களிடம் நடந்து கொண்டது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை மாநகராட்சியின் 61 வது வார்டில் திமுக சார்பில் கவுன்சிலராக இருப்பவர் ஆதி மகேஸ்வரி. இவரது கணவர் திராவிட மணி. இவர் நேற்று அதிகாலை சுமார் 6 மணியளவில் 61வது வார்டுக்கு உட்பட்ட சுகாதார அலுவலகத்தில் சுகாதார ஆய்வாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து கொண்டு, அதிகார தோரணையில் சுகாதாரப் பணியாளர்களின் வருகை பதிவேட்டை எடுத்து ஆய்வு செய்து

சுகாதார பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், "சுகாதார பணியாளர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை நானே முடிவு செய்வேன், நான் சொல்லும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும்" என கூறியதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த சம்பவத்தை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது, சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கவுன்சிலரின் கணவருக்கு மாநகராட்சி வேலைகளில் தலையிட யார் அதிகாரம் கொடுத்தது? இவர் சுகாதார ஆய்வாளரா? இல்லை மண்டல ஆய்வாளரா?என்று கேள்வி எழுப்பியுள்ள தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதார துப்புரவு மற்றும் பொதுப்பணியாளர் சங்கத்தினர், முக சுழிப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம் குறித்துமாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டுள்ளனர்.

கண்டிக்கத்தக்க இந்த விவகாரத்தில்மாநகராட்சி ஆணையர் தலையிட்டுஇது போன்ற சம்பவங்கள் மற்ற வார்டுகளில் நடைபெறாமல் இருக்க தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...