கோவையில் இன்று 238 இடங்களில் காய்ச்சல் முகாம்; பள்ளிகளுக்கு சென்று ஆய்வு - சுகாதாரத்துறை தகவல்.

35 குழுவில் - தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது. பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா:

கோவையில் கடந்த சில தினங்களாக, குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்கள், தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்படுகின்றன.

இதன் காரணமாக, கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில், புறநகரில் 168 இடங்கள் மாநகராட்சியில் 70 இடங்கள் என, மொத்தம் 238 இடங்களில் இன்று காய்ச்சல் முகாம் நடத்தப்படுகிறது.

இந்த காய்ச்சல் முகாமை நடத்த 35 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தலா ஒரு மருத்துவர், செவிலியர், மருத்துவ பணியாளர், ஆய்வாளர்கள் இருப்பார்கள். இந்த குழுவினர் பள்ளிகளுக்கு சென்று காய்ச்சல், இருமல், சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளனர்.

இதையடுத்து காய்ச்சல் பாதிப்பு அறிகுறி உள்ள மாணவர்கள் தொடர்ந்துகண்காணிக்கப்பட உள்ளனர். இந்த முகாமில் குழந்தைகளுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...