கோவையை சேர்ந்த இருவரை விசாரணைக்காக டெல்லி அழைத்து சென்ற என்.ஐ.ஏ அதிகாரிகள்.

கோவை ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை பிடிபட்ட கர்நாடக மாநில PFI செயலாளர் சாதிக் முகமது மற்றும் கோவையை சேர்ந்த PFI தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் ஆகிய இருவரையும் விசாரணைக்காக விமானம் மூலம் NIA அதிகாரிகள் டெல்லி அழைத்துச் சென்றனர்.


கோவை: நாடு முழுவதும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (PFI) அமைப்பின்நிர்வாகிகளின்

வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ( NIA) சோதனை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கோவை கரும்புக்கடை பகுதியில் PFI அமைப்பின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. பின்னர் அவரை NIA அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.



இதே போல, கர்நாடக மாநில PFI செயலாளர்சாதிக் முகமது தனது உதவியாளருடன் இன்று காலை கோவை வந்தார். கோவை ரயில் நிலையத்தில் வைத்து சாதிக் முகமதுவையும் அவரது உதவியாளரையும் பிடித்த NIA அதிகாரிகள் ரயில் நிலையம் முன்பாக உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இஸ்மாயில் மற்றும் சாதிக் முகமது ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நான்கு NIA அதிகாரிகள் விமானம் மூலம் டெல்லி சென்றனர். சாதிக் முகமதுவுடன் வந்த உதவியாளர் கோவை விமான நிலையத்தில் விடுவிக்கப்பட்டார்.

டெல்லியில் வைத்து விசாரணைக்கு பின்னர் இருவரும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், PFI நிர்வாகி வீட்டில்சோதனை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒப்பணக்கார வீதி, ஆத்துப்பாலம் , சாய்பாபா காலனி உட்பட பல்வேறு இடங்களில் PFI, எஸ்.டி.பி.ஐ அமைப்பினர் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...