மேட்டுப்பாளையம் அருகே வனபத்ரகாளியம்மன் கோவில் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தின் முன் பக்கத்தை வெல்டிங் இயந்திரத்தின் மூலம் மர்ம நபர்கள் அறுக்க முயன்ற போது, ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால் அங்கிருந்து திருடர்கள் தப்பினர்.
கோவை: மேட்டுப்பாளையம் அருகே வனபத்ர காளியம்மன் கோவில் சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ர காளியம்மன் கோவில் செல்லும் சாலையில் பாங்க் ஆப் பரோடா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம். மையத்தை அந்த பகுதியினரும், வனபத்ர காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் பயன்படுத்தி வந்தனர்.
இதனால் இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் எப்போதும் பணம் இருக்கும் கூறப்படுகிறது. இந்நிலையில் இரவு நேரங்களில் இப்பகுதியில்ஆள்நடமாட்டம் அதிகம் இருக்காது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று இரவுஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
வெல்டிங் இயந்திரத்துடன் உள்ளே சென்ற மர்ம நபர்கள் ஏ.டி.எம். இயந்திரத்தின் முன் பக்கமாக அறுத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது ஏ.டி.எம். மையத்தில் இருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அலாரம் ஒலித்ததும் அச்சமடைந்த கொள்ளையர்கள் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த லட்சக்கணக்கான பணம் தப்பியது.
இதுதொடர்பான தகவல் வங்கி அதிகாரிகளுக்கு சென்ற நிலையில், அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த ஆய்வாளர்நவநீத கிருஷ்ணன் மற்றும் போலீசார் கொள்ளை முயற்சிக்கு உள்ளான ஏ.டி.எம். இயந்திரத்தை பார்வையிட்டனர்.
இதனைதொடர்ந்து, கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.