கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை...! பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா செயற்குழு உறுப்பினரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

தமிழகத்தில் சுமார் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்ட, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையை சேர்ந்த இஸ்மாயிடம் விசாரணை மேற்கொண்டு அவரை அழைத்துச் சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எஸ் டி பி ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.



கோவை: கோவை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.



இந்தியா முழுவதும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.



தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுமார் 16க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். அதில், கோவை கரும்புக்கடை பகுதியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் வீட்டிற்கு சிஆர்பிஎப் மற்றும் உள்ளூர் போலீசார் என 500க்கும் மேற்பட்ட போலீசார் உடன் வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இஸ்மாயிலை விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.



இதனிடையே, இஸ்மாயிலை அழைத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்த சாலை மறியலில் ஈடுபட்ட எஸ் டி பி ஐ மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொண்டர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதே போல், கேரளாவில் இருந்து வந்த இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ரயில் நிலையம் அருகே உள்ள ஹமல்டன் கிளப்பில் வைத்து இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.



இதனைத் தொடர்ந்து, அவர்களையும் வேறு இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு வந்த இடங்களில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...