உஷார்...! கோவை கலெக்டர் உட்பட உயர் அதிகாரிகளின் பெயரில் ஆன்லைன் மோசடி: இருவர் கைது - விழிப்புடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..!

'பாஸ் ஸ்கேம்' (Boss Scam) என்று அழைக்கப்படும் இந்த வகை ஆன்லைன் மோசடியில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களை குறிவைத்து இந்த மோசடி கும்பல் ஏமாற்றுகின்றனர்.


கோவை: கோவையில் மாவட்ட ஆட்சியரின் பெயரில் உணவக லைசென்ஸ் பெற்றுத் தருவதாக கூறி நூதன முறையில் பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நாளுக்கு நாள் சைபர் குற்றங்கள் புது புதுஅவதாரங்களை எடுத்து வருகிறது என்றால் அது.மிகையாகாது. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டும், அறிமுகம் இல்லாத நபர்களிடம்பேசுவது, ஆன்லைன் லிங்க்கை கிளிக் செய்வது என சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் மோசடி வலையில் மக்கள் சிக்கி வருகின்றனர்.

வழக்கமாக லோன் ஆப், ஓடிபி மூலம் வங்கி பணம் திருட்டு, கிரிடிட் கார்டு மோசடி போன்ற குற்றங்கள் ஒருபுறம் நடக்கின்ற நிலையில், அதனை தடுக்கவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பில் இருப்பவர்களே சைபர் கிரைம் ஆன்லைன் ஆசாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

அப்படிப்பட்ட ஆன்லைன் ஆசாமிகள் முதலில் குறிவைப்பது காவல்துறை, மாவட்ட நிர்வாகம் போன்ற பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகளை தான்.

"பாஸ் ஸ்கேம்" - Boss Scam

"பாஸ் ஸ்கேம்" என்று அழைக்கப்படும் இந்த வகை ஆன்லைன் மோசடியில் உயர் அதிகாரிகள் சைபர் கிரிமினல்களால் ஏமாற்றப்படுவதில்லை. இந்த நூதன மோசடியில், உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களே சைபர் குற்றவாளிகளால் ஏமாற்றப்படுகின்றனர்.

முதலில் அவர்கள் உயர் அதிகாரிகளின் நடமாட்டத்தை நோட்டமிடுகின்றனர். அதாவது டெல்லியில் நடக்கும் கூட்டத்துக்கு ஒரு அதிகாரி செல்கின்றார் என்றால். அவர் செல்வது அவருக்கு கீழ் பணியாற்றும் அனைவருக்கும் தெரியும். அந்த கூட்டம் காலை ஆரம்பித்து மாலை வரை நடக்கும் என்பது போன்ற தகவல்கள் அவர்களுக்கு தெரிந்திருக்கும்.

தொடர்ந்து உயர் அதிகாரியின் நடமாட்டத்தை கண்காணிக்கும் சைபர் கிரிமினல்கள், அவரின் சமூக வலைதளத்தை ஹேக் செய்து, பின்னர் அவருக்கும் கீழ் பணியாற்றும் ஊழியர்களிடம் மெசேஜ் அனுப்பி பேசுகின்றனர். ஊழியர்கள் நம்பும்படி அந்த உயர் அதிகாரிகள் போலவே அந்த கிரிமினல்கள் பேசுகின்றனர்.

அதாவது நான் டெல்லியில் மீட்டிங்கில் இருக்கின்றேன்,தற்போது பேச முடியாது. அதனால் நான் டெக்ஸ்ட் மெசேஜ் செய்கிறேன். எனக்கு உடனடியாக ரூ.10,000அனுப்புங்கள் என்று தெரிவித்து யூபிஐ(UPI) லிங்கை அனுப்புவது, பணம் இல்லை என்றால் கிஃப்டு கார்டு ரீசார்ஜு செய்து அனுப்பும்படி என பல் விதமாக பேசிபணம் கேட்கின்றனர்.

இதுமட்டுமல்லாமல் சில நேரம் உயர் அதிகாரிகளை போல சமூக வலைதள கணக்குகளை ஆரம்பித்து பொதுமக்களுக்கு மற்றும் துறை அதிகாரிகளுக்கு ரெக்யூஸ்ட் (Request) கொடுத்து ஏமாற்றுகின்றனர். பின்னர், அவர்களிடம் நூதனமாக பணம் போன்ற உதவிகளை கேட்கும் போது, துறை ஊழியர்களும், உயர் அதிகாரிகளிடம் எப்படி பேசுவது என நினைத்து பணத்தை மாற்றி விடுகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, கோவை கலெக்டர் பெயரில் வாட்ஸ் ஆப் கணக்கை ஆரம்பித்த நபர் ஒருவர் அவரை போலவே மற்றொருவரிடம் பேசி உணவக லைசென்சுக்காக பணம் பறித்திருக்கின்றார். தன்னை கலெக்டருக்கு நெருக்கமானவன் என்று தெரிவித்து மற்றொரு ஃபோனில் கலெக்டர் போல டெக்ஸ்ட் செய்து ஏமாற்றியுள்ளான்.

இந்த புகாரின் அடிப்படையில், ஆந்திராவை சேர்ந்த ராஜகுரு, ஸ்ரீதர் என இருவரை பந்தைய சாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

எனவே, அதிகாரிகளின் பெயரிலோ, அரசியல் பிரமுகர்களின் பெயரிலோ பணம் கேட்டு மெசேஜ் வந்தாலோ, ரெக்வஸ்ட் வந்தாலோ ஒரு முறைக்கு இருமுறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் எனசைபர் கிரைம் வல்லுநர்கள் மற்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...