இடையர்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக் கொண்ட தனியார் பேருந்து - போக்குவரத்து பாதிப்பு..!

தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக இடையர்பாளையம் அருகேயுள்ள சாலையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து சிக்கிக் கொண்டதால் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், கிரேன் கொண்டு பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.



கோவை: இடையர்பாளையம் அருகே தடாகம் சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.



கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக பிரதான மாநில நெடுஞ்சாலையான தடாகம் சாலையின் பல்வேறு இடங்களில் குழாய்கள் பதிப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.

இந்த சாலையில் இடையர்பாளையம் அருகே காந்தியடிகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் வாசலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டு குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு இருந்தது.



இந்நிலையில் அங்கு பள்ளம் தொண்டப்பட்டு வேலை நடப்பது தொடர்பாக முறையாக எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை. இதை அறியாமல் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக அந்த பள்ளத்திற்குள் சிக்கிக் கொண்டது. இதையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக இறக்கிவிட்டு பேருந்தை கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



தடாகம் சாலையில் கடந்த 4 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் காரணமாக ஏற்கனவே அப்பகுதியில் கடும் தூசி பிரச்சனை இருந்து வந்த நிலையில், தற்போது சாலைகளில் அடிக்கடி பள்ளம் ஏற்படுவதால் வாகன ஓட்டிகளும்,பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

பேருந்து பள்ளத்திற்குள் சிக்கியதை தொடர்ந்து தடாகம் சாலையில் அப்பகுதி மக்களே தாமாக முன்வந்து வாகன போக்குவரத்தை மாற்றி அமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.





Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...