ஈமு கோழி மோசடி: தம்பதிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை, ரூ.2.24 கோடி அபராதம் - இருவருக்கும் பிடிவாரண்ட் - கோவை டான்பிட் நீதிமன்றம் உத்தரவு.

ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2.24கோடி அபராதம் விதித்த நீதிபதி, ஆஜராகாததால் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.


கோவை: திருப்பூர் மாவட்டத்தில் ஈமு கோழி நிதி நிறுவனம் நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்த வழக்கில், கணவன் - மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த கோவை நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் ரங்கபாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவசேனாபதி(45). இவர், தாராபுரம் சாலையில் சிவா ஈமு பார்ம் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி மோகன பிரியதர்ஷினி(40) மற்றும் தாயார் பத்மாவதி (65)

ஆகியோரும் அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக இருந்துள்ளனர்.

இந்த நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் 'டெபாசிட்' செய்தால் மாதம் ரூ.10,000 வட்டி மற்றும் ஆண்டுதோறும் ரூ.10,000 போனஸ் மற்றும் 2 ஆண்டுகள் கழித்து டெபாசிட் தொகை முழுவதையும் திருப்பி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இதற்காக 31 இடங்களில் கிளை அலுவலகம் திறந்து 337 பேரிடம் சுமார் 5 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளனர். சில மாதங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு வட்டி பணத்தைகொடுத்து வந்த இவர், திடீரென நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 2012ஆம் ஆண்டு, சிவசேனாபதி அவரது மனைவி மோகன பிரியதர்ஷினி மற்றும் தாயார் பத்மாவதி ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முழுமையாக நிறைவு பெற்ற நிலையில், நீதிபதி ரவி தீர்ப்பை வழங்கினார்.

அதில், குற்றம் சாட்டப்பட்ட சிவசேனாபதி மற்றும் அவரது மனைவி மோகன பிரியதர்ஷினி ஆகியோருக்கு மோசடி செய்த குற்றத்திற்காக தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சட்டப்பிரிவு 5-ன் கீழான குற்றத்திற்காக தலா 10 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும், 2.42 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். தாயார் பத்மாவதி விடுவிக்கப்பட்டார்.

தண்டனையை ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டு உள்ளதால் மொத்தம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை பெற்ற இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...