யூ டியூப்பர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் பாலக்காடு சாலையில் சென்றுள்ளார். போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது போத்தனூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.
கோவை: கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்யும் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவு செய்து வருகிறார். இவரது யூடியூப் சேனலை லட்சக்கணக்கான இளைஞர்கள் பின்பற்றி வருகின்றனர்.

அண்மையில், டிடிஎப் வாசன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிய வந்தது தொடர்பாக போலீசார் எச்சரித்து அனுப்பினர். அப்போது அதிகளவு இளைஞர்கள் கூடி மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கோவை அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் பாலக்காடு சாலைகளில் டிடிஎப் வாசன் மற்றொரு யூ டியூப்பர் ஜி.பி.முத்துவை தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளார்.

அப்போது ஜி.பி.முத்து ஹல்மட் அணியவில்லை.

இந்த விடியோ டிடிஎப் வாசன் தனது யுடியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்நிலையில், போக்குவரத்து விதிகளை மீறி மாநகர பகுதியில் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனம் இயக்குதல், ஹல்மட் அணியாமல் சென்றது. ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது போத்தனூர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.