எம்.பி. ஆ. ராசாவை ஒருமையில் மற்றும் இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் படி பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது தபெதிகவினர் புகார் மனு

கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் ஆ.ராசாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய, பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, எம்.பி ஆ.ராசா குறித்து ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். பீளமேடு காவல் நிலையத்தில், தபெதிகவினர் புகார் மனு அளித்துள்ளனர்.


கோவை: கோவையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தந்தை பெரியார் குறித்து அவதூறாகவும் அச்சுறுத்தும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தமராமசாமி மீது வழக்கு பதிவு செய்ய கோரி தபெதிகவினர் மனு.

கோவையில் இந்து அமைப்பினர் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் பேசிய பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி, ஆ.ராசாவை போலீஸ் காவல் இல்லாமல் தைரியம் இருந்தால் கோவை மாவட்டத்திற்குள் வர சொல்... என்று அச்சுறுத்தும் வகையில் ஒருமையில் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.

மேலும், தந்தை பெரியாரை ஒருமையில் பேசி இரு தரப்பினரையிடையே வன்முறையை தூண்டும் வகையில் கோவை பாஜக மாவட்ட தலைவர் பேசியுள்ளார்.

இந்த விடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆன நிலையில், ஆ.ராசா மற்றும் பெரியார் குறித்து ஒருமையில் அவதூறாக பேசியதோடு, இரு தரப்பினரிடையே வன்முறையை தூண்டும் வகையில் பேசிய கோவை பாஜக மாவட்ட தலைவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரி த.பெ.திகவினர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



புகாரளிக்க வந்து நீண்ட நேரம் ஆகியும் போலீசார் புகார் மனுவை பெறவில்லை என தபெதிகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...