முறையான அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகளை வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி பத்ரிநாராயணன் எச்சரித்துள்ளார்.
கோவை: உயர் நீதிமன்ற ஆணைப்படி கோவை மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன், உத்தரவின் பேரில் இன்று (20.09.2022) கோவை மாவட்டம் முழுவதும் அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முறையான அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த 202 விளம்பர பதாகைகளை அதன் உரிமையாளர்கள் மூலம் காவல்துறையினர் அகற்றினர்.
மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற பதாகைகளை முறையான அனுமதி இல்லாமல் வைப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அறிவுறுத்தியுள்ளார்.