கோவையின் வாட்ஸ் ஆப்பில் வந்த லிங்கை கிளிக் செய்ததால் இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் - 4 நாட்களில் ரூ.12 லட்சம் அபேஸ்...!

வாட்ஸ் ஆப் லிங்க் மூலம் அமேசான் நிறுவனத்தின் பெயரில் முதலீட்டு ஆசை காட்டி கோவையை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபரிடம் சுமார் ரூ.12 லட்சம் பணத்தை அபேஸ் செய்த ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


கோவை: வாட்ஸ் ஆப் மூலம் லிங்க் அனுப்பி இளம்பெண் ஒருவருக்கு முதலீடு ஆசை காட்டி 4 நாட்களில் 12 லட்சம் ரூபாயை சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

வழிப்பறி, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடந்தாலும் நொடி பொழுதும் இடைவிடாது நடக்கிறது சைபர் குற்றங்கள். விதவிதமான விளம்பரங்கள், ஆசையை தூண்டும் அறிவிப்புகள் என ஆன்லைன் மோசடி கும்பலிடம் படித்தவர்கள், படிக்காதவர்கள், இளைஞர்கள் என பலரும் சிக்கிக் கொள்கின்றனர்.

அந்த வகையில், சமீபத்திய கோவையை சேர்ந்த இளம் பெண் தொழிலதிபர் சைபர் கிரைம் குற்றவாளிகளால் ஏமாற்றப்பட்டிருக்கிறார். அந்த பெண் எதார்த்தமாக தனது செல்போனை பயன்படுத்திய போது அவரது வாட்ஸ் ஆப்புக்கு லிங்க் ஒன்று வந்துள்ளது.

அந்த லிங்கை கிளிக் செய்த நிலையில், பிரபல ஆன்லைன் ஷாப்பிங் தளமான, அமேசானில் இருந்து பேசுவதாக கூறி அவரிடம் வாட்ஸ் ஆப்பில் சாட் (Chat) செய்துள்ளனர். அப்போது அவரிடம் 200 ரூபாய் முதலீடு செய்தால் 300 ரூபாய் கிடைக்கும், என கூறியுள்ளனர்.

இதேபோன்று ஒரு குறிப்பிட்ட தொகைக்கு ஒரு குறிப்பிட்ட வட்டியுடன் முதலும் பெருந்தொகை கிடைக்கும் எனவும் தேவைப்படும் நேரத்தில் வங்கிக் கணக்குக்கு மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இளம் தொழில் அதிபரான அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்திருக்கிறார். இந்த நிலையில் நான்கே நாட்களில் அவர் 12 லட்சம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் முதலீடு செய்திருக்கிறார்.

பின்னர், முதலீடு செய்த பணத்தை எடுக்க முடிவு செய்த அந்த பெண் ஆன்லைனில் அவர்களை அணுகியிருக்கின்றார். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை. வாட்ஸப்பில் பேச முடியவில்லை. அலைபேசியும் சுவிட்ச் ஆஃப்.

அப்போது தான் தெரியவந்தது வாட்ஸ் ஆப்பில் வந்தது லிங்க் அல்ல ஆன்லைன் ஆசாமிகள் விரித்த வலை என்று. பெண்ணின் முதலீடு ஆர்வத்தை சாதகமாக பயன்படுத்திய சைபர் கிரிமினல்கள் கவர்ச்சிகரமான முதலீட்டு விளம்பரங்களை தந்து பெண்ணிடம் ரூபாய் 12 லட்சம் அபேஸ் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கோவை சிட்டி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி கும்பலை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

அதனடிப்படையில் சிட்டி சைபர் கிரைம் போலீசார் ஐபிசி 420, 66 மற்றும் 2008 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல நிறுவனமான அமேசான் பெயரிலேயே அதுவும் படித்த இளம் பெண் தொழில் அதிபரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த ஆசாமிகளால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முதலீட்டு ஆர்வத்தை மூலதனமாக கொண்டு நடக்கும் நூதன ஆன்லைன் மோசடிகளில் இருந்து தப்ப விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...