கோவையில் இருந்து சென்னைக்கு பறந்த இதயம்..! விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

கோவை அரசு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த நடராஜ் என்ற இளைஞரின் இதயம், கண்கள், கல்லீரல் ஆகிய உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதன் மூலம் சென்னை, சேலம், கோவையை சேர்ந்த 6 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.


கோவை: கோவையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம், கண்கள் மற்றும் கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யபட்டதன் மூலம் சென்னை, சேலம் மற்றும் கோவையை சேர்ந்த 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள நாதம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (27). கடந்த 16-ம் தேதி கோவை அவிநாசி சாலையில் நடந்த விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதையடுத்து, நடராஜின் இதயம் சென்னை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்களில் ஒன்று கோவை அரசு மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும் வழங்கப்பட்டது.

இதேபோல், கல்லீரல் சேலம் தனியார் மருத்துவமனைக்கும், இரண்டு கண்களும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வழங்கப்பட்டதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

நேரத்தை வீணாக்காமல் இதயத்தை விமானத்தில் சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. எம்ஜிஎம் மருத்துவமனையின் டாக்டர்கள் இருவர் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் 4 பேர் தலைமையில், நேற்று முன்தினம் இரவு 8.35 மணிக்கு தனியார் விமானம் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, விமான நிலைய நிர்வாகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில், வழக்கமாக மேற்கொள்ளப்படும் ஸ்கேனிங் நடைமுறையில் இருந்து இதயம் கொண்டு செல்லப்பட்ட பெட்டிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

பின்னர், நடராஜின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. அவரது உடலுக்கு டீன் நிர்மலா, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினர். தானமாக பெறப்பட்ட உடல் உறுப்புகள் மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...