அவிநாசி அருகே பள்ளிக்குள் புகுந்து தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய திமுக கவுன்சிலரின் கணவர் - பரபரப்பு வீடியோ..!

கைகாட்டிபுதூர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரை 16வது வார்டு உறுப்பினர் ரமணியின் கணவர் துரை குடிபோதையில் பள்ளிக்குள் வந்து மாணவர்கள் முன்பு ஆசிரியரை தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள அரசு துவக்கப் பள்ளியில் புகுந்து தலைமை ஆசிரியரை திமுக கவுன்சிலரின் கணவர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



அவிநாசி அடுத்த கைகாட்டிபுதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவரது வீட்டிலிருந்து தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பல முறை தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், பள்ளியில் உள்ள செடிக்கு பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்ற போது, பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநீரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றியுள்ளார்.

இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்டபோது, ஆத்திரமடைந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பாஸ்கர் பள்ளி மாணவர்கள் 6 பேரை அடித்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட பாஸ்கர் என்பவரை கண்டித்துள்ளனர்.

மேலும், மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர்.



அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17 வார்டு உறுப்பினர் திமுகவைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பள்ளிக்குள் வந்த அந்த நபர், நீங்கள்ளாம் யார்ரா... இங்க எதுக்குடா பிரச்சன பண்றீங்க.. நீங்க இதையெல்லாம் கேட்க கூடாது என்று பள்ளி குழந்தைகளின் முன்பாகவே போதையில் அனைவரையும் ஒருமையில் அநாகரீகமாக பேசியுள்ளார்.



அப்போது, தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டி கேட்க வேண்டியது தானே என்று கேட்டதால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அவர், தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெறித்து தாக்கியுள்ளார்.

இதை அருகில் இருந்தவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

பள்ளிக்குள் புகுந்து, தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில், மாணவர்களின் கண் முன்னே தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...