மின் கட்டண உயர்வு: பல்லடத்தில் தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கம் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதம்

கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பல்லடத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



தமிழ்நாடு மின்சார வாரியம் சமீபத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்தியது. இந்த கட்டண உயர்வுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் நெசவு தொழில் அமைப்பினர் பலரும் தொடர்ந்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில், மின் கட்டண உயர்வு ஜவுளி உற்பத்தி தொழிலை பெரிய அளவில் பாதிப்படைய செய்துள்ளதாக கூறி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொசவம்பாளையம் பிரிவில் 300க்கும் மேற்பட்ட தென்னிந்திய நாடா இல்லா தறி நெசவாளர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



இந்த போராட்டம் காரணமாக சுமார் 11 கோடி ரூபாய் அளவிலான காடா துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கைகள்

* தமிழக அரசின் 30 சதவீத மின் கட்டண உயர்வால், யூனிட் ஒன்றுக்கு ஒரு ரூபாய் 50 காசு முதல் இரண்டு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதை செலுத்த முடியாது.

* உயர் மற்றும் தாழ்வழுத்த மின் இணைப்புகளுக்கான நிர்ணய கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

* புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பீக் ஹவர் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்.

* நாடா இல்லா தறி நெசவுத்துறைக்கு என தனி மின்சாரம் அளித்து ஊக்கமளிக்க வேண்டும்

என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...