நீலகிரி தொகுதியில் பெரும்பாலான கடைகள் அடைப்பு; பொதுமக்கள் அவதி - இந்து முன்னணி நிர்வாகிகள் 18 பேர் கைது.

இந்து முன்னணி கடையடைப்பு அறிவிப்பு காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அவதி.


கோவை: இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், நீலகிரி பாராளுமன்ற தொகுதி எம்.பி ஆ. ராசாவை கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நீலகிரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று கடையடைப்பு நடத்துவதாக இந்து முன்னணியினர் தெரிவித்திருந்தனர்.

அதன்படி, நீலகிரி பாராளுமன்ற தொகுதி முழுவதும் இந்து அமைப்பினர் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு, வியாபாரிகளிடம் நோட்டீசு வினியோகம் செய்தனர். அதேசமயம், இந்து முன்னணியின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல் வழக்கம்போல் கடைகளை திறக்க வேண்டும் என தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினரும் துண்டுபிரசுரம் வழங்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்தநிலையில் இன்று இந்து முன்னணி அறிவிப்பின் படி நீலகிரி தொகுதியில் பல இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில இடங்களில் மட்டுமே கடைகள் திறக்கப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்னூர் மற்றும் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இந்து முன்னணி அமைப்பின், செயலாளர் திவாகர், வடக்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

குன்னூர் மற்றும் கோத்தகிரி.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மார்க்கெட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. 30 கற்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர் பாதிப்படைந்துள்ளனர்.

மாவட்ட எஸ்பி ஆசிஸ் ராவத் தலைமையில் குன்னூரில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோத்தகிரி அருகே உள்ள அரவேனு பஜாரில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளில் ஒரு சில கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.கோத்தகிரி நகர பகுதிகளிலும் ஏராளமான கடைகள் மூடப்பட்டே கிடந்தன.

கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் 150க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இன்று காலை வியாபாரிகள் வழக்கம்போல் கடையை திறப்பதற்காக கடைக்கு வந்தனர். போலீசாரும் கடைகள் திறந்து கொள்ளுங்கள் நாங்கள் பாதுகாப்பு தருகிறோம் என தெரிவித்து சென்றனர்.

ஆனாலும் வியாபாரிகள் கடையை திறப்பதா? வேண்டாமா? என்ற குழப்பத்திலேயே உள்ளனர். இதனால் இதுவரை கோத்தகிரி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் திறக்காமல் மூடப்பட்டு உள்ளது.

குன்னூர் மார்க்கெட், மேல் குன்னூர், சிம்ஸ்பூங்கா, வண்டிச்சோலை, வெலிங்டன், அருவங்காடு, எலநள்ளி, சேலாஸ், தூதூர்மட்டம் உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

கூடலூர் பஸ் நிலையம், ஊட்டி சாலை, மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளும் மூடப்பட்டிருந்தது.அதேபோல, பந்தலூர், சேரம்பாடி என அனைத்து பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையம், அன்னூர்

நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், அன்னூர் போன்ற பகுதிகள் கோவை மாவட்டத்தில் வருகின்றன. அந்த பகுதியிலும் இன்று கடை அடைப்பு நடைபெற்று வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இன்று காலை முதலே டீக்கடை, செல்போன் கடைகள், ஜவுளி கடைகள், உணவகங்கள் உள்பட பல கடைகளும் மூடப்பட்டிருந்தது.

இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மார்க்கெட்டுகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கடைகள் மூடப்பட்டிருந்ததால் வெளியூரில் இருந்து பஸ்சில் மேட்டுப்பாளையத்திற்கு வந்தவர்கள், ரெயிலில் வந்தவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கு உணவகங்கள் இல்லாததால் சிரமம் அடைந்தனர்

மேலும், அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் நகரமே கடைகள் அனைத்தும் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோன்று, காரமடை, சிறுமுகை பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அன்னூர், எஸ்.எஸ்.குளம் பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.

இந்து முன்னணி போராட்டம் காரணமாக நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் அடிக்கடி ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...