#BREAKING: கோவை துடியலூர் குப்பைத் தொட்டியில் கிடந்த ஆணின் கை, காணாமல் போன அழகு நிலைய ஊழியருடையது- விசாரணையில் தகவல்.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபு என்பவரது கை என்று தெரியவந்துள்ளது. அவரது செல்ஃபோன், கடந்த 15 ஆம் தேதியில் இருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. குப்பை தொட்டியில் கிடைத்தது, பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.



கோவை: கடந்த நான்கு நாட்களுக்கு முன் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் இடது கை, கோவை துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள குப்பை தொட்டியில்கண்டறியபட்டது

பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக,எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில்டி.எஸ்.பி. துடியலூர் ஆய்வாளர் மற்றும் 8 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 8 தனிப்படை அமைக்கப்பட்டு நடத்தி வந்த விசாரணையில்,புது தகவல்கள் கிடைத்துள்ளது.

கோவை, துடியலுார் அருகே வி.கே.எல்., நகர் குப்பை தொட்டியில், பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் ஆணின் இடது கை, இரண்டு துண்டுகளாக கடந்த, 15ம் தேதி மீட்கப்பட்டது. சம்பவ இடத்தில் எஸ்.பி., பத்ரி நாராயணன் உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில், துண்டாகி கிடந்த கை, கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டு இருக்கலாம் என தெரியவந்தது.

இந்நிலையில், கோவை காட்டூர் போலீசார், கோவையில் அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த ஈரோட்டை சேர்ந்த, 39 வயது மதிக்கத்தக்க நபர் காணவில்லை என வழக்குப்பதிவுசெய்திருந்தனர்.

மேலும், துண்டிக்கப்பட்ட கையின் டி.என்.ஏ., மாதிரிகள் எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக காணாமல் போனவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

காட்டூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட காணாமல் போன நபரின் துண்டான கை தான் துடியலுார் அருகே மீட்கப்பட்டதா..? என்ற கோணத்திலும் காட்டூர் போலீசாருடன், துடியலுார் போலீசார் இணைந்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து, நடந்த விசாரணையில் கண்டறியப்பட்ட கை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு(39) என்பவரது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள அழகு நிலையத்தில் பணியாற்றி வந்த பிரபுவின் செல்போன் கடந்த 15 ஆம் தேதியில் இருந்து ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு போலீசாரும் இங்கு வந்த விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போது, குப்பை தொட்டியில் கிடைத்தது, பிரபுவின் கைதான் என்பதை உறவினர்கள் உறுதி செய்துள்ளனர்.

இந்நிலையில், தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...