கோவையில் வழி தவறி நகர்ப்பகுதிக்குள் நுழைந்த காட்டு மாடு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது

சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை, வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம், சரவணம்பட்டியை அடுத்துள்ள கீரணத்தம் பகுதி அருகில் சகாரா சிட்டி எனப்படும் இடத்தில் நேற்று காலை ஒரு காட்டு மாடு நடமாடுவதாக கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், கோவை வனச்சரக அலுவலர் அருண்குமார் தலைமையிலான 30 பேர் கொண்ட குழுவினர் காட்டு மாடு குறித்து விசாரித்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் சரவணம்பட்டியை அடுத்துள்ள விநாயகபுரம் பகுதியில் அந்த காட்டுமாடு இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு மாட்டை பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 4.30 வரை சரவணம்பட்டி, விலாங்குறிச்சி, காளப்பட்டி வரை பின் தொடர்ந்த நிலையில், காளப்பட்டி அருகில் சரவணம்பட்டியிலிருந்து வரும் ஓடை அருகே அடர்ந்த புதர் பகுதியினுள் காட்டு மாடு சென்ற காரணத்தினால் அதனை பின் தொடர்வதில் சிரமம் ஏற்பட்டது.



பின்னர், சின்னியம்பாளையம் வழியாக சூலூர் கரையான்பாளையம் பகுதியில் நின்றிருந்த காட்டு மாட்டை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.



அதனை பொக்லைன் மூலம் தூக்கிச் சென்று தடாகம் வனப்பகுதியில், வனத்துறையினர் பத்திரமாக விடுவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...