பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.1000 அபராதம், வீடியோ எடுத்து அனுப்புபவர்களுக்கு ரூ.500 சன்மானம் - காட்டம்பட்டி ஊராட்சியின் வித்தியாசமான அறிவிப்பு...!

அன்னூர், காட்டம்பட்டி பகுதியில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்கும் வகையில் குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ எடுத்துக் கொடுத்தால் ரூ.500 சன்மானம் வழங்கப்படும் எனவும் ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே காட்டம்பட்டி என்ற ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் வீட்டிற்கே வந்து சென்று வாங்கிச் செல்கின்றனர்.

அப்படியிருந்தும் பொதுமக்கள் பலரும் குப்பைகளை சாலையோரங்களில் கொட்டிச் செல்கின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் பெண் ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், வித்தியாசமான முறையில் விளம்பர பலகைகளை பொது இடங்களில் அதாவது குப்பை கொட்டப்படும் இடங்களில் வைத்துள்ளார்.

இந்த விளம்பர பலகையில், பொது இடங்களில் குப்பை கொட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், குப்பை கொட்டுபவர்களை வீடியோ படம் எடுத்துக் கொடுத்தால் 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நூதன முயற்சியால் அப்பகுதியில் குப்பைகள் கொட்டுவது குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...