ரங்கநாதபுரம் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருப்பராயன் கோவில் வீதியில் பம்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கிய நிலையில், பொதுமக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர்.
கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ரங்கநாதபுரம் பள்ளிக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கருப்பராயன் கோவில் வீதியில் கழிவு நீரை வெளியேற்றும் பம்பிங் ஸ்டேஷன் ஆகியவற்றை எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கினார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராம்நகர் பகுதியில் ரங்கநாதபுரம் ஆரம்பப் பள்ளி மற்றும் மேல் நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவ, மாணவிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், மேஜை, நாற்காலி, பீரோ மற்றும் கற்றல் உபகரணங்களை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இன்று வழங்கினார்.
இதனை தொடர்ந்து 66 வது வார்டு அம்மன் குளம் பகுதியில் கருப்பராயன் கோவில் வீதியில் தாழ்வான பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வீடுகளுக்கு முன்பு தேங்கி இருக்கும் கழிவு நீரை வெளியேற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைக்கப்படாமல் பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்களுக்கும் ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அந்த பகுதி பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக கழிவு நீரை அகற்றும் பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து அப்பணிகளையும் வானதி சீனிவாசன் இன்று துவக்கி வைத்தார்.

பிரச்சனைகளை நேரடியாக வந்து கேட்டது மட்டுமல்லாமல் அதிகாரிகளை அழைத்து நேரில் வரச்செய்து உடனடி தீர்வு கண்டதற்கு நன்றி தெரிவிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.