ஆ. ராசா ரூபத்தில் தி.மு.க.வுக்கு சனி திசை நடக்கிறது - காடேஸ்வரா சுப்பிரமணியன்

இந்துக்களை அவதுாறாக பேசிய எம்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க காணாமல் போகும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



கோவை: இந்துக்களை அவதுாறாக பேசிய எம்.பி. ராஜா மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகத்தில் தி.மு.க காணாமல் போகும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி எம்.பி. ராஜாவை கண்டித்து செப். 20ம் தேதி நீலகிரி தொகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக, ஏற்கனவே இந்து முன்னணி அறிவித்திருந்தது.

இதுதொடர்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டடத்தில் பங்கேற்ற காடேஸ்வரா சுப்ரமணியம், இந்துக்களை குறித்து அவதூறாக பேசிய எம்.பி ஆ. ராசா மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

பின்னர் பேசிய அவர், தி.மு.க.வுக்கு சனி திசை நடக்கிறது. இது ஆ.ராசா மூலம் நடந்து கொண்டிருக்கிறது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத்தையும், மத துவேசத்தையும் தொடர்ந்து ஆ. ராசா பேசி வருகிறார்.

அவரது தலைவர் ஸ்டாலின் வீட்டினர் சொந்த ஊரில் சிறப்பாக கோயில் கும்பாபிஷேகம் செய்துள்ளனர். உறவினர்கள், ஸ்டாலின் நன்றாக இருக்க வேண்டும் என்று யாகங்கள் நடத்துகின்றனர். அவரது வீட்டில் தொடர்ந்து இந்து கலாசாரங்களும் பாரம்பரியங்களும் கடைபிடிக்கப்படுகின்றன.

எம்.பி.ஆ. ராசா பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தி.மு.க. காணாமல் போய்விடும். தி.மு.க. அரசை மதச்சார்பின்மை அரசு என்கின்றனர். கட்சியில் இந்துக்களுக்கு விரோதமாக பேசுவோர், இருக்கும்போது எப்படி மதச்சார்பின்மை அரசாக இருக்க முடியும்? இவ்வாறு பேசுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...