வார்டு 86: ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தர மருத்துவரை பணியமர்த்த வேண்டும் - தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி

ஆரம்ப சுகாதார நிலையத்தில், நிரந்தர மருத்துவரை பணியமர்த்தவும், ராஜவாய்க்கால தூர்வார தடையாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அங்கன்வாடி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று ஆய்வின் போது மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 86வது வார்டு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார மையம், ராஜ வாய்க்கால் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தார்.



கோவை மாநகராட்சியின் 86வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று ஆய்வு நடைபெற்றது. முதலாவதாக, 86வது வார்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், நிரந்தர மருத்துவர்கள் நியமனம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



இதனையடுத்து, குப்பையும், சகதியுமாக இருந்த ராஜ வாய்க்காலை ஆய்வு செய்தார்.



தூர்வார இடையூறாக உள்ள, சூப்பர் கார்டன், சூப்பர் அவென்யூ, பொன்விழா நகர், குழந்தை கவுண்டர் வீதி, ராயல் நகர், திப்பு நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, ராவுத்தர் வீதியில் பயன்பாடு இல்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த அவர், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதேபோல், ஆசாத் நகர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை இரண்டாகப் பிரித்து புதிதாக கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஆசாத் நகர் பகுதியில் மைதானத்தில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றிட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் அண்ணாதுரை, 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ. அஹமது கபீர், மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...