அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பெண்கள் - அனுமதி அளிக்காததால் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா..!

தண்டுக்காரன்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மனு அளிக்க வந்த பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: திருப்பூர் அடுத்த தண்டுக்காரன் பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி மனு அளிக்க வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டுக்காரன்பாளையம் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையால், பெண்கள் பாதிக்கப்படுவதால் கடையை அகற்றக் கோரி பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும் அமிலம் கலந்த மதுபானம் விற்பனை செய்யப்படுவதால் அதை அருந்தும் ஆண்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் அவலநிலை இருப்பதாக பெண்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.



எனவே, மக்களுக்கு பல்வேறு வகையில் இடையூறாக உள்ள கடையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பெண்கள் உட்பட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.



இந்நிலையில், கூட்டமாக வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்க மறுத்ததால், அதிருப்தியடைந்த பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தர்ணா போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பான சூழல் நிலவியதால், இதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆட்சியரை சந்தித்து மதுபான கடையை அகற்றக்கோரி மனுவை அளித்தனர்.

Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...