கந்து வட்டி கொடுமை - ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி நெசவாளர் மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை முயற்சி.

அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்த மாற்றுத்திறனாளி, பத்திரத்தை அடமானம் வைத்து வாங்கிய ரூ. 3 லட்ச கடனை வட்டியுடன் ரூபாய். 5 லட்சமாக கட்டியும், பத்திரத்தை கொடுக்காமல் மிரட்டி வருவதாக குற்றம் சாட்டினார்.



கோவை அன்னூர் பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி. மாற்றுத்திறனாளியான இவர், நெசவு தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெயராம் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ரூபாய் 3 லட்சத்தை கந்து வட்டிக்கு வாங்கியுள்ளார்.

இந்நிலையில், வட்டியுடன் சேர்ந்து ரூ.5 லட்சம் கட்டிய நிலையில், பத்திரத்தை தராமல் ஜெயராமன் மிரட்டி வருவதாககூறி, இன்று காலை கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராமசாமி திடீரென உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.



இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்தபோலீசார் அவரை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறைதீர்ப்பு நாளான இன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து சென்று வரும் நிலையில், மாற்றுத்திறனாளி ஒருவர் கந்துவட்டி பிரச்சனையால் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





Newsletter

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...