போதை மாத்திரைகள் விற்பனை - கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேர் கைது: 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல்

ரத்தினபுரி, டாடாபாத் அருகே பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.


கோவை: கோவை ரத்தினபுரி, டாடாபாத் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஒரு சிறுவன், 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ரத்தினபுரி, டாடாபாத் 9வது வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் அடிப்படையில், ரத்தினபுரி போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டதும் அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி செல்ல முயன்றனர். அப்போது, போலீசார் அவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களிடம் நடத்திய சோதனையில் 4 பேரிடம் போதைக்காக பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தன.

இதையடுத்து, போதை மாத்திரைகள் வைத்திருந்த ரத்தினபுரி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் விவேக் பாரதி (18), தேனி மாவட்டத்தை சேர்ந்த கோவையில் தங்கி கல்லூரியில் படித்து வரும் தனபாலன் (19), போதை மாத்திரைகளை பதுக்கி கல்லூரி மாணவர்களுக்கு சப்ளை செய்யும் மருந்து கடை உரிமையாளர் கரிகாலன் (49) மற்றும்16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிடிபட்ட மாணவர்களிடமிருந்து 3 வகையான போதை மாத்திரை அட்டைகள் என மொத்தம் 1,304 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கோவை நகரில் உள்ள சில கல்லூரி மாணவர்கள் போதை மாத்திரைகளை பரவலாக பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

மேலும், சிங்காநல்லூரில் மருந்து கடை நடத்தி வரும் கரிகாலன் கருக்கலைப்புக்கு பயன்படுத்தும் மாத்திரை, வலி நிவாரண மாத்திரை, நரம்பு நோய் பாதிப்புக்கான மாத்திரைகளை போதைக்காக மாணவர்களுக்கு வழங்கியதும், 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது

தெரியவந்தது.

போதை மாத்திரைகளை வாங்கும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தில், வகுப்பறையில் பயன்படுத்தியும், போதை மாத்திரை தேவைப்படும் நபர்களை குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து அங்கு மாத்திரை வழங்கி வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...